Sunday, April 12, 2009


ஈழத் தமிழர் தோழமைக் குரல்
லஷ்மி சரவணக்குமார்
(உன்னதம் – மார்ச் 2009 இதழின் பதிவுகள் பகுதி)
கலை இலக்கியத்தின் மாபெரும் சாதனைகளாய் எஞ்சியிருப்பவையெல்லாம் போராட்டங்களுக்கும் யுத்தங்களுக்கும் பின்னால் உருவானவைகளாகத்தான் முழுக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எழுதப்படுவதற்கான அல்லது பாடப்பெறுவதற்கான தேடலும் தீவிரமும் குருதி தோய்ந்த நாட்களினூடாகவே அதீதமாய் இன்றும் இருந்து வருகிறது. சமகாலத்தில் புறவுலகில் அனுபவிக்க நேர்கிற யுத்தமும் வன்முறையும் ஒரு படைப்பாளிக்கு அளிக்கும் நெருக்கடிகள் ஏராளம். இனப்போராட்டங்கள் இன்று உலக வரைபடத்தின் உருவத்தையே மாற்றியமைக்கக் கூடியவைகளாய் வந்திருப்பதன் நீட்சியை கொசாவா, காஸிம், ஈழம் என ஏராளமாக நாம் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
மானுட விடுதலைக்காகவும், இனப்போராட்டங்களின் கலை, வரலாற்றுச் சிறப்புகளையும் பக்கம் பக்கமாக எழுதுவதற்கு தமிழ் படைப்பு வெளியில் ஆட்கள் இல்லாமலில்லை. ஆனால், சொந்த இனத்தைப் பற்றிய அக்கறை என்னவாயிருக்கிறதெனப் பார்த்தோமானால் ஓர் மானுடப் பிரச்னை என்கிற அளவில் கூட நம்மவர்கள் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை என்பது வேதனையான விஷயம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் என்ன மாதிரியானதென்கிற பிரக்ஞை நம்மில் நூற்றில் பத்து பேருக்காவது இருந்தாலும் ஆச்சரியம்தான். ஈழத்தில் தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதல் உச்சத்திலிருக்கும் இன்றையத்தேதியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் கவனித்தோமானால் அத்தனை பேரும் தங்களுக்குத் தேவையான ஏதாவதொரு சாயத்தைப் பூசிக்கொண்டிருப்பதை தெளிவாக உணரமுடியும். சிங்களவர்களுடனான இந்திய அரசின் கபட நாடகங்கள் இன்று நேற்றல்ல, 1987ல் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய நாட்களிலிருந்து தொடர்ந்து கொண்டிருப்பதுதான். தமிழர்களுக்கு தயக்கமின்றி இவர்கள் இழைக்கும் துரோகம் அதிகரித்தப்படியே இருக்கிறதேயொழிய எந்தச் சூழலிலும் குறைந்தபாடில்லை. உண்மையில் ஈழத்த்மிழர்களின் மிக முக்கியமான எதிரிகள் யாரும் கொழும்புவில் இல்லை. டெல்லியில்தான் இருக்கிறார்கள். இதை இவ்வளவு எளிதில் மறுத்துவிட முடியாத அளவிற்குத்தான் நமது வெளியுறவுத் துறையின் செயல்பாடுகளும் இருந்து வருகின்றன.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழீழம் மலர வேண்டுமெனவும் இன்று உலகம் முழுக்க போராட்டங்கள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. சிங்கள் அரசு நடத்தி வரும் இனவோழிப்பில் அழிக்கப்படுவது வெறுமனே மனிதர்கள் மட்டுமல்ல. மிக நீண்ட தொன்மங்களுடைய ஓரினத்தின் கலாச்சாரமும் வரலாறும் சேர்ந்துதான். கலாச்சாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் அதீத உரிமைகளை எடுத்துக் கொள்கிற அறிவுச் சமூகம் இவ்வளவிற்கும் பிறகும் என்ன செய்து கொண்டிருக்கிறதென கவனித்தோமானால், வழக்கம்போல் நம்முடைய சாம்பார் வடை எழுத்தாளர்கள் தங்கள் பதின்பருவ காதல்களின் வலிகளைத்தான் தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பார் வடைகளுக்கு எழுதுவது மட்டுமே தமது பிறவிப்பயனென்கிற கொள்கை கொண்ட ஜெய ஜெய சாம்பார் வடைக்கு சக எழுத்தாளர்களின் அந்தரங்கத்தை தோண்டிப் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. இன்னொரு புறத்தில் தும்மினாலும் கூட உலகப் போராளிகளின், இனக் குழுக்களின் வரலாறு பக்கம் பக்கமாய் எழுதிப் பணம் பார்க்கும் ஆசாமிகள், (எழுத்தாளர்கள் என்று சொல்வது உயர்வு நவிற்சி அணியாகிவிடும்) பிரச்சனைகளுக்கு எந்த எதிர் வினையும் காட்டாமல் அடுத்து வரப்போகிற முக்கிய தமிழ் சினிமாக்காரர்களின் படைப்புகளுக்கான விமர்சனங்களை இப்பொழுதே எழுதி சரிபார்ப்பதில் தீவிரமாயிருக்கின்றனர்.
மாறாக எந்தவிதமான அரசியல், சாதிக் கட்சிகளின் சார்புமின்றியும் இலக்கிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தாமலும் தமிழ்ப் படைப்பாளிகள் சிலர், வழக்கறிஞர்கள், மீனவர்கள், மாணவர்கள், திருநங்கைகள், உழைக்கும் பெண்கள் என வெவ்வேறு அமைப்பினரை ஒருங்கிணைத்து தலைநகர் புதுதில்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்திவிட்டு வந்திருக்கின்றனர், கவிஞர்கள் லீனா மணிமேகலை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, செல்மா பிரியதர்ஸன், கரிகாலன், யவனிகா ஸ்ரீராம், எழுத்தாளர் கோணங்கி, காலபைரவன், அஜயன் பாலா, லஷ்மி சரவணக்குமார், நரன், லிவிங் ஸ்மைல் வித்யா என படைப்பாளிகளோடு மற்ற அமைப்பினரையும் சேர்த்து நூற்றியிருபது பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழக தமிழ் மாணவர்களும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் படைப்பாளிகளுடன் இணைந்து இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தனர்.
தலைநகரில் இவர்கள் நடத்திவிட்டு வந்திருக்கிற போராட்டங்கள் அரசியல் தளத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதை இங்கிருக்கும் பலரும் கேட்டதாக அறிகிறேன். முதலில் என்ன விதமான போராட்டங்கள் நடந்தன என்பதையும் களத்தில் நிகழ்ந்தவைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிடுதல் நலம் எனத் தோன்றுகிறது. உடலையறுக்கும் டெல்லியின் குளிரில் இத்தனை பேரைக் கூட்டிச் சென்று என்ன விதமான போராட்டங்களை நடத்தப் போகிறார்கள் என்கிற ஐயம் வந்திருந்த பலருக்கும் இருந்தது. பிறகுதான் ஒரு விஷயத்தை நேரடியாக உணர முடிந்தது. போராட்டக் களத்தை மட்டும் தெளிவாகத் தீர்மானித்து விட்டால் செயல்பாடுகளை நேரமும் சூழலும் தாங்களே தீர்மானித்துக் கொள்வதுடன் தீவிரத்தையும் ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறது. மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம், மாபெரும் பேரணிகள், பாராளுமன்ற முற்றுகை, மொட்டையடிக்கும் போராட்டம், இலங்கைத் தூதரக முற்றுகை, ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு, இறுதியாக ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் மாபெரும் பேரணியும் கலை நிகழ்ச்சிகளும் என பல்வேறு கட்டங்களாக நடந்த போராட்டத்தில் முக்கியத்துவமற்றவைகளென்று எந்தவொரு நிமிடத்தையும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பங்கிற்கு போட்டி போட்டு களத்தில் வேலை செய்ததை மறுக்க முடியாது. கவிஞர்கள் லீனா மணிமேகலை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி இவர்களோடு சேர்த்து டெல்லி மாணவர்களின் அசாத்தியமான உழைப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.
பாராளுமன்றக் கூட்டத் தொடர் துவங்கிய வேளையில் இவ்வளவு பெரியதொரு போராட்டத்தை ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். அதன் அதிர்வுகளை போராட்டப் பந்தலுக்கு வந்து பேசிச் சென்ற தமிழக, புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையில் உணர முடிந்தது. சிப்பிப் பாறை ரவிச்சந்திரன், கு. ராமதாஸ், ஏ.கே. மூர்த்தி ஆகியோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினார்கள், பா.ம.க. உறுப்பினர் கு. ராமதாஸ் பேசியபோது, ‘இத்தனை நாட்களாக ஈழப் பிரச்சனையைப் பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இன்று நீங்கள் வந்து போராடியிருப்பதன் விளைவாய் அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று சொன்னதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசிய மாதர் சம்மேளத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து எழுதி வருபவரும் இங்கிலாந்து நாட்டிற்கான முன்னால் வெளிநாட்டுத் தூதுவருமான குல்தீப் நாய்யார், சச்சார் அறிக்கையைத் தந்த ராஜேந்திர சச்சார் இவர்களோடு சேர்ந்து மிக முக்கியமாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கத்தின் உரையையும் சொல்ல வேண்டும். ஈழத்தில் இந்திய அரசின் போர் நிலைப்பாடு குறித்தும் இலங்கை அரசியல் குறித்தும் அவர் பேசியதற்குப் பின்பாக வேறு சில விஷயங்களையும் இப்போது யோசிக்கத் தோன்றுகிறது. 1987 இந்தியா – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு திருகோணமலையின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியா பெற்றிருப்பதோடு அங்கு அனல் மின் நிலையம் ஒன்றையும் உறுவாக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப முதலீடு என பொருளாதார முதளிடுகளிலும் நமது மத்திய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதன் மூலம் இப்பிராந்தியத்தில் தன்னை வலுவானதொரு அதிகார மையமாய் நிறுவிக் கொள்ள முடியும் என்கிற உறுதி இருப்பது தெளிவு. இந்திய அரசின் இந்த எண்ணவோட்டத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்ட இலங்கை அரசாங்கம் இயன்றவரை தங்களுக்குச் சாதகமானவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரமாயிருக்கிறது. குருதி ஓடும் ஒரு நிலத்தில் ஏராளமான உயிர்களைக் காவு வாங்கிய திருப்தியோடு தனது நலன்களைச் சாதித்துக் கொள்ளும் முனைப்பிலேயே இரண்டு அரசாங்கங்களும் இருக்கிறதேயொழிய அப்பாவி மக்களின் நலன்களைப் பற்றிய எந்தவொரு கவலையும் இவர்களுக்கில்லை.
முக்கியத்துவம் மிகுந்த உலகின் பல புரட்சிகளில் மாணவர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அசாத்தியமானதொரு பங்கிருக்கிறது. இன்று தமிழகம் முழுக்க தன்னெழுச்சி பெற்றிருக்கும் போராட்டங்களையும் அதுபோன்ற ஒன்றாகவேதான் பார்க்க முடிகிறது. போராட்டப் பந்தலிலும் தூதரகத்தை முற்றுகையிடுதலிலும் மொட்டையடிக்கும் போராட்டத்தின் போதும் இவர்கள் காட்டிய தீவிரத்தையும் கட்டற்ற தன்னையையும் வெறும் சொற்களால் எழுதித் தீர்த்துவிட முடியாது. மூன்றாவது நாள் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகையில் பிற மொழி மாணவர்களிடமும் நம்முடைய போராட்ட வேட்கை பரவியிருந்தது. முத்துக்குமாரின் கடைசிக் கடிதத்தை வெறுமனே கடிதமாக மட்டுமே அணுகாமல் மிக முக்கியமான அரசியல் பிரதியாகத்தான் அணுக வேண்டும். அவ்வளவு தூரத்திற்கு அக்கடிதத்தின் வரிகள் மாணவர்களின் மனங்களில் எழுச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.
‘நீ இறந்துவிட்டாலுங்கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக, ஒரு போராட்டமாக. ஒரு நம்பிக்கையாக . . .’ என்கிற அல்ஜீரியப் பாடகன் மத்தூப்பின் வரிகளைத்தான் இச்சமயத்தில் நினைத்துப் பார்க்க முடிகிறது. மூன்று நாட்களும் பறையிசையையும் பாடல்களையும் நிகழ்த்திய புத்தர் கலைக்குழுவினரின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஈழத்தமிழர் தோழமைக் குரலின் இந்தப் போராட்டங்கள் தில்லியை தொடர்ந்து தமிழக முழுக்கவுள்ள மாவட்டங்களிலும் தேசத்தின் பிற மாநிலங்களிலும் விரிவடையவிருக்கிற இந்த வேளையில் பெருந்திரளான மக்கள், அமைப்புகளைக் கடந்து வந்து இணைய வேண்டும். ஒரு இனத்தை முற்றாக அழித்தொழிக்க முயற்சிக்கும் இந்திய, சிங்கள அரசுகளின் வன்முறையை வேடிக்கை பார்த்தபடியிருப்பதைத்தான் ஆறு கோடித் தமிழர்களும் தொடர்ந்து செய்யப்போகிறார்களா? அல்லது முழுமையாகக் களத்திலிறங்கி தமிழீழத்துக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்களா? என்பதற்கு மிக விரைவாகவே பதில் கிடைத்தாக வேண்டும்.



ஈழத் துயரம் எல்லோர் குரலிலும்
- பிரேம்
(குமுதம் தீராநதி – மார்ச் 2009 இதழின் பதிவுகள் பகுதி)





சம உரிமைக்கான குரலாகத் தொடங்கி இன விடுதலைக்கான தற்காப்புப் போராட்டமாகத் தீவிரமடைந்து தனி நாட்டுக்கான போராக மாறி பல்வேறு இழப்புகளுக்குப் பின் தற்போதைய இனத்துடைத்தழிப்பு எனும் கொடூர நிலையை அடைந்து நிற்கும் ஈழ நிலத்தின் துயரம் பல ஆண்டுகளாகத் தமிழர்களின் மறதிக்குள் புதைந்து போனதாக இருந்தது. இலங்கை அரசு என்பது சிங்கள மக்களுக்கான அரசு மட்டுமே எனத் தன்னை மாற்றிக் கொண்டதுடன் தமிழர்களை அழிப்பதையே தனது திட்டமாகவும் வைத்திருக்கும் கொடுமை பேசப்படாத ஒஅன்றாக தமிழகத்தில் மாறிவிட்ட நிலை ஒரு பெரும் இனத்துயர்தான். ஆனால் மீண்டும் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதும் தமிழர் வாழும் சிறு நிலப்பகுதி மீது நேரடிப் போரை இலங்கை அரசு நடத்துவதும் இந்தக் கொடிய மவுன நிலையைக் கலைத்தது, தற்போது தமிழகத்தில் ஈழத்துயரம் மெல்ல உணரப்பட்டு வருகிறது.
உரிமை கேட்கும் மக்கள் மொத்தமாக அழிக்கப்பட் எந்த அரசியல் அறம் இடம் கொடுக்கிறது? என்ற கேள்வியை எழுப்பாமல் ‘பயங்கரவாதம்’ ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பொது ஆதிக்கக் கருத்தை ஈழ மக்கள் படுகொலையிலும் முன்வைத்து அமைதி காக்கும் ஒரு நிலை வேறு இனங்களுக்கு ஏற்பட்டு இருக்காது என்பது மட்டும் உண்மை.
இலங்கை அரசு சில லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்து ஒரு அமைதியை ஏற்படுத்த தேவை என்ன என்பது பற்றித் தமிழ்ச் சமூகம் முழுமையும் கேள்வி எழுப்பி போர் நிறுத்தம் செய்ய என்னவெல்லாம் போராட்டம் எடுக்க வேண்டுமோ அனைத்தையும் எடுத்திருக்க வேண்டும். ஒரு இனத்துயரம் கவிந்து இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடக்காத ஒரு சூழலில் மாணவர் போராட்ட்ங்களும் அதனைத் தொடர்ந்த முத்துக்குமாரின் தீக்குளிப்பும் ஒருவித அதிர்வை ஏற்படுத்தி உள்ளன. மீந்திருக்கும் ஈழத்தமிழர்கள் அடைந்து வரும் சொல்லுக்குள் அடங்காத வலியும் துன்பமும் இந்நேரம் தமிழகம் கடந்து இந்திய தேசம் முழுவதும் ஒரு கவன அழுத்தமாக மாறி இந்திய ராணுவ உதவியுடன் இலங்கை அரசு நிகழ்த்தும் இனப்படுகொலை போர் நிறுத்தப்படுவதற்கான அழுத்தங்கள் உருவாகி இருக்க வேண்டும். பிற திட்டமிடல்களும் போச்சுவார்த்தைகளும் விவாதங்களும் அதற்குப்பினே நடந்திருக்க வேண்டும். இவை எல்லாம் நடக்கத் தமிழ்ச் சமூகம் ஈழ அவலத்தை தந்து அவலமாகக் கொண்டு வலிமையான போராட்டங்களை சனநாயக அடிப்படையில் செய்திருக்க வேண்டும். ஆனால் ஈழத்துயரம் எமது துயரம் அல்ல என்பதான ஒரு வெகுமக்கள் மனப்பான்மை இறுகிப்போய், ஈழ மக்கள் தோழமைக் குரல் என்பது ஒரு விளிப்பு நிலைக் குரலாகவே இருந்துவரும் சூழலில், ஒரு கூட்டுக் குரலாக ‘ஈழத் தமிழர் தோழமைக்குரல்’ என்னும் அமைப்பு ஒரே குரலில் போரை நிறுத்து என்ற கதறலுடன் ஒரு முன்னெடுப்பைச் செய்துள்ளது. மதிமுக, பாமக, தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் என அரசியல் கட்சிகள் எடுக்கும் போராட்டங்கள் ஒன்று திரண்ட விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் எனில் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் என் வேறுபட்ட கொள்கைகள் உடைய, சில வகைகளில் முரண்பாடுகள் உடைய குழுக்கள்கூட ‘ஈழத் தமிழர் துயர்’ நீக்கும் இயக்கமாக தொடர்ந்து இணைந்தும் தனித் தனியாகவும் குரல் கொடுக்கவும் போராடவும் வேண்டிய தேவை உள்ளது.
அவ்வகையில் ‘ஈழத்தமிழர் தோழமைக்குரல்’ என்ற இயக்கம் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிக்கையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள், மீனவர் அமைப்புகள் என பல வடிவான அடையாளங்களுடன் ஆனால் ஒரே குரலில் ‘போரை நிறுத்து, போரை நிறுத்து, ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும் இனப்படு கொலைப் போரை நிறுத்து’ என தலைநகர் டில்லியில் மூன்று நாட்கள் தனது குரலை உரத்து ஒலித்து, பெண்ணியப் படைப்பாளிகளின் முன்னெடுப்பிலும் வழிகாட்டுதலிலும் இப்போராட்டம் நிகழ்த்தப்பட்டதென்பது ஒரு வரலாற்றுப் புள்ளி.
பிப்ரவரி 12ஆம் தேதி காலை டில்லி மண்டி அவுசில் திரண்ட போராட்டக் குழுவில் தமிழகத்தில் இருந்து திரண்ட போராட்டக் குழுவில் தமிழகத்தில் இருந்து வந்த 100 இயக்க உறுப்பினர்களுடன் டில்லியின் மாணவர்கள், வழக்குரைஞர்களும் இணைய ஊர்வலம் தொடங்கி ஈழத்தமிழரின் கோபத்தை உணர்த்தியபடி பாராளுமன்ற சாலை நோக்கி நகர்ந்தது. ஜந்தர் மந்தர் பகுதியில் மூன்று நாட்கள் உண்ணாநிலைப் போராட்டமும் ஒரு நாள் மறியலும் செய்வதென போராட்டக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ‘இந்தியா ஆயுதம் வழங்க இலங்கை இனப்படுகொலை செய்யும்’ கொடூரத்தை ஒவ்வொருவரும் கொதிப்புடன் உணர்த்தியபடியே இருந்தனர். புத்தர் கலைக்குழுவினர் பறை இசையும் சமர்ப்பா குமரன் பாடல்களும் கோபத்தையும் துயரத்தையும் ஒலித்தப்படியே இருந்தன. ஈழத்து அரசியல் வரலாறும் உரிமைப்போரின் தேவையும் தொடர்ந்து விளக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அமைப்பாளர்களான மனித உரிமை அமைப்பு பொன். ச்ந்திரன், மாணவர் கூட்டமைப்பு வெங்கடாசலம், தென்னிந்திய மீனவர் நல சங்கம் பாரதி, புதுச்சேரி மீனவப் பெண்கள் அமைப்பு விமலா பெரியாண்டி, லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்றோர் ஒவ்வொரு நகர்வையும் கலந்தாலோசித்து நிகழ்த்திக் கொண்டிருந்தனர். எழுத்தாளர் கோணங்கி தலைமையில் படைப்பாளிகள் தமது பங்கை அளித்தனர்.
13ஆம் தேதி இரண்டாம் நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்த ஈழத்தமிழர் தோழமைக்குரல் குழுவினரை ஊக்குவித்தும் போரை நிறுத்த் வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராமதாஸ்(PMK), து. ராஜா(CPI) ஆகியோர் பேசினர். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஈழத்தமிழர் நிலை பற்றி விரிவான ஒரு உரையை நிகழ்த்தியது கேட்போரை கண்கலங்க வைத்தது. மதிமுக கட்சியினர் 3000 பேருக்குமேல் அன்று வைகோ தலைமையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்தமிழர் தோழமைக்குரல் போராட்டக் குழுவினரை ஊக்குவித்து அக்கூட்டத்திலும் தலைவர்கள் பேசினர்.
இதற்கிடையில் லீனா மணிமேகலை, மாலதி மைத்திரி, இன்பா சுப்பிரமணியன் தலைமையில் 28 பேர் கொண்ட எழுத்தாளர்கள், மாணவர்கள், மனித உரிமை இயக்கத்தினர் குழு ஒன்று வேறு வடிவில் போராட்டம் ஒன்றை நிகழ்த்த இலங்கைத் தூதரகம் நோக்கி ஐந்து சிற்றுந்துகளில் சென்றனர்.
ஏதாவது ஒரு வகையில் தமது எதிர்ப்பை, அடக்க முடியாத கோபத்தைக் காட்ட அனுமதி இல்லாத அந்த இடத்தை நோக்கிச் சென்ற அவர்கள் இலங்கைத் தூதரகத்தின் முன் வண்டியை நிறுத்தி கூட்டமாகப் பாய்ந்து சென்று எதிர்ப்பு வாசகங்களை எழுப்பியபடி ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரிக்கத் தொடங்கினர். பெண்கள், ‘ராஜபக்சே, நான் உன் தாய். என்னைக் கற்பழி, ராஜபக்சே, நான் உன் சகோதரி. என்னைக் கற்பழி, ராஜபக்சே, நான் உன் மகள். என்னைக் கற்பழி,’ என்ற வாசகங்களை எழுதிய துணிகளை ஏந்தி கூக்குரல் எழுப்பினர். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்பதை எதிர்பாராத காவல்துறையினர் போராட்டக் குழுவினரைச் சூழ்ந்து கொள்ள, மேலும் காவல் படையினர் அங்கு விரைந்தனர். தமது போராட்ட நேரத்தை நீடிக்க வேண்டி குழுவினர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகத்தினர் அனைத்தையும் பதிவு செய்ய, காவல் துறையினர் போராட்டக்காரர்களை காவல்துறையின் இரு வண்டிகளில் இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செல்ல முயன்றனர். போராட்டக் குழுவினர் அதனை மறுத்து ஒரே குழுவாகத்தான் செல்வோம் என வலியுறுத்தினர். அதேபோல பெண்களைக் கைது செய்ய பெண் காவலர்கள் வேண்டும் என வலியுறுத்தி அதற்கும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரே நேரத்தில் இரு குழுவாக ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு, இலங்கைத் தூதரகம் முன் எதிர்ப்பு குரல் எழுப்புதல் என்ற இரு போராட்டங்களை நிகழ்த்திய நிறைவுடன் 28 பேரைக் கொண்ட போராட்டக் குழுவினர் கைதாகி காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
உண்ணா நிலைப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரி வேறு ஒரு போராட்டத்தில் மறுநாள் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்று இரவு கைதான 28 பேரும் விடுவிக்கப்பட்டனர். எழுத்தாளர்கள், மாணவர்கள், மனித உரிமைப் போராளிகள் இணைந்து எப்படி இது போன்ற ஒரு போராட்டத்தை செய்தீர்கள்? உங்களுக்குப் பின்னால் பெரிய ஒரு மக்கள் இயக்கம் இருக்கிறதா? என காவல் துறையினர் விசாரணையின் போது கேட்டுள்ளனர். இது பெரும் மக்கள் எழுச்சி ஒன்றின் தொடக்கம் என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
14ஆம் தேதி நடந்த உண்ணா நிலைப் போராட்டம் இந்தப் போராட்ட எழுச்சியை ஈழத்தமிழர் துயரம் நீங்கும் வரை எப்படிக் கொண்டு செல்வது என்பது பற்றிய ஆலோசனைப் பேச்சால் நிரம்பி இருந்தது.
ஈழத்துயர் சொல்லவந்த எல்லோர் குரலிலும் ஏதோ ஒரு கட்டத்தில் உடைந்து கண்ணீரால் நிரம்பியதும், தீக்குளிக்கவும், தீமூட்டவும் கொண்டு செல்லும் ஒரு மனநிலை இறுக்கமும் அடுத்தத் தலைமுறை வேறு ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது. பெண்களின் தலைமையில் தவிர்க்க முடியாத வேறு ஒரு வகை எதிர்ப்பு அரசியல் களம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது ‘ஈழத் தமிழர் தோழமைக் குரல்’ திட்டமிடப்பட்ட விதத்திலும் செயல்பட்ட வகையிலும் காட்டித் தந்திருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வீதியிலும் ஈழத் தமிழரின் துயரம் செய்தியாக, தகவலாக இல்லாமல் தமது வாழ்வின் ஒரு துயரமாகப் படிந்து பரவிச் செல்லும்போது மாற்றம் எப்படியும் எதோ ஒரு வடிவில் வந்துசேரும் என்பதுதான் இப்போது நினைவில் மீந்திருக்கிறது.

Sunday, February 15, 2009

War is not an answer, Voice for Eelam Tamils cry aloud in the Capital

"Stop the war in Srilanka" , the slogan raised in unison in New Delhi, by more than 100 strong activists of Voice for Eelam Tamils, representing Tamil Writers, Poets, Artists, Students, Human Rights Groups, Fishermen and women, Enuchs from Tamilnadu, Pondy and New Delhi. The activists sporting black T shirts reading "Stop War in Srilanka , Voice for Eelam Tamils" had descended on the streets of New Delhi to raise their concern and voice on the ongoing Genocidal war in Srilanka. Colorful and graphic placards and banners held high by the slogan raising activists surprised and struck the media and the people. "Gandhi's Nation waging war, Buddha's nation sinking in blood" , "War will continue after a short commercial break", "Arrest the No 1 War Criminal Rajapakshe" were some of the captions and graphics which would have moved the minds and hearts of any sensitive person. The songs and the drum beats by the cultural groups moved one and all. The colourful rally moved through the main thoroughfares of the capital, from Mandi house to the Parliament Street. No passers by walking or travelling, could have ignored. The rally culminated with an intensive demonstration held on the parliament street, and drew the attention of the national media.

The slogans raised in Hindi, English and Tamil reverberated in the minds of all who participated and witnessed.  Fiery speeches rendered by the writers, poets and human rights activists say, Konangi(Writer), Prem(Writer, Scholar, Delhi University) Ponchandran(P U C L), Venkatachalam(Co ordinator, All Colleges Student Union, Tamilnadu), Lingan (South Indian Fishermen movement) demanded the immediate ceasure of war in Srilanka, abetted and aided by to India.   The scintilliating speech made by Adhikesavan, a local Tamil Student Leader in Chaste Hindi, raised the eye brows of the locals. Solidarity expressed by the National Federation of Indian Women, the pioneer most women's movement who were at Janthar Manthar, (demanding implementation of 33% reservation for women) enthused the protesters.  Ms.Annie Raja, NFIW offered total support from the women of India across to join the campaign against war. The unqualified support expressed by the Delhi and National Chapter of People Union of Civil Liberties boosted the morale of Participants

Though, any positive response from the Government is yet to be seen, the overwhelming response received from the simple folks of North India, who surrounded the dharna was a ray of hope on conscience of Humanity.

13th February 2009 at New Delhi will be a red letter day in the annals of history of Eelam struggle. A striking team of  "Voice for Eelam Tamils" from Tamilnadu All Colleges Students Fedration, Tamil Poets movement, South Indian Fishermen movements, Pondicherry Fisherwomen actvists, PUCL friends and  prominent Tamil Writers like Konangi, Yavanika Sriram, Ajayan Bala, Sureshwaran stormed before the Srilankan Embassy on 13th February around 3pm and  held the local security and police personnel at bay by their vociferous gate crash protest demonstration demanding immediate stopping of war.
 

The Protestors burnt the effigy of Rajapakshe, demanding his arrest for waging the genocidal war in Srilanka and he be tried for his war crimes. Women Protestors Poet Filmmaker Leena Manimekalai, Malathi Maithri, Inba Subramanian, Human rights activist Dhanam and Assistant Film Director  Living Smile Vidya sported banners reading "I am your mother come and rape me" "I am your sister come and rape me", which startled the press and the public alike.  The protestors were arrested and removed from the high security zone and were detained in jail and were only left free late in the night.  The national and the international media captured the entire event and aired it to the conscience of the world!

While a section of the "Voice of Eelam Tamils" stormed the Srilankan Embassy, the other section continued with their hunger strike at Janthar Manthar.  In a surcharged milieu of slogan shouting, songs, and speeches, four students (Samuel, Ramesh, Vinod Kumar and Delhi Raj) and Lakshmi Saravanakumar, a poet, came forward to tonsure their head, a custom done by those who light the pyre fire, on the demise of his relative.  The students lamented death of their "kith and kin" and paid last respects to those who lost their precious life in Srilanka.   This not only denotes the death of justice, death of dignity, death of freedom and death of Press Freedom and the conscience of humanity.  The students and the poet who tonsured their head deserve all appreciation.

The venue of hunger strike was visited by many leaders and eminent personalities and expressed their solidarity with the suffering Tamils in Srilanka and urged the Srilankan and Central Govt to stop the war and save the Tamils.

D.RAJA, the General Secretary of CPI and a member of Lok Sabha addressed the satyagrahis and explained in detail how this humanitarian crisis in Srilanka was precipitated by the indifference, callousness and chauvinist attitude of the successive Srilankan governments and the half hearted approach for lasting political solutions with in a democratic frame work.  He warned the Central Government that if it does not do enough the stop the war immediately, India will see not only the uprising of the Tamils of India but also the freedom loving people from the rest of India, will dislodge the present anti-people government.

Shivaji Lingam, a sitting MP of Srilanka also addressed the protestors and explained the history of the struggle of  Eelam Tamils and how it unfolded itself over six decades now.  He emphasized that the students and youth of Eelam Tamils were constrained to resort to militant struggle only because all their peaceful and democratic struggle for dignity and justice were put down heavily by the brutal Srilankan forces.  He said the  so called political devolution now trumpeted with the 13th Constitution amendment, is only a farce and the Tamils are unable to exercise their rights even for their basic needs and self rule. He spent good lot of time with the protestors clarifying various questions raised on the issue. His visit the venue was mutually inspiring.
 

Mr. Kuldip Nayar, leading Columnist, Human Rights Activist, Ex Rajya Sabha Member and Retired British Ambassador of India, despite his advanced age, gave an inspiring talk and challenged that no one can muffle our democratic voice to support the just and democratic struggles all people, including Srilankan Tamils.
Justice Rajinder Sachar, who always expresses his pride to call himself as an Ex President of PUCL, joined the "Voice of Eelam Tamils" and reassured unqualified support to the cause of just struggles by the Srilankan Tamils and their supporters in India.  He reiterated it is the duty of all freedom and peace loving people in India to urge the central government to stop the war in Srilanka.

Visit of several members of Parliament including Dr.Ramadoss, AK Murthy, Dr. Danraj, E.Ponnusamy, Krishnan,, Sipi Parai Ravichandran during the day helped the Protesters to keep up their morale.

The finale of the second day campaign was the rousing welcome given to the courageous activists who were arrested for protesting before the Srilankan embassy and paying rich tributes to Murugathasan, who laid his life by self-immolation in front of UN Head Quarters at Geneva demanding the intervention of the international community to save the suffering Tamils of Srilanka.
The relay fast continued and on the third day as well in Jantar Mantar and reserve police force also joined the fast as a result of the previous day's outreach.With the tight security, Voice for Eelam Tamils continued their protest, and this time, the struggle groups from various states on other political issues camped in the Parliament area visited, expressed solidarity and even raised slogans along with the cultural programs. Every member of the delegation from Tamilnadu All College Students Fedartion, South Indian Fishermen movement activists, PUCL friends, Transgenders, Advocates, Writers, Poets shared their concern, emotions and the further duty of taking the movement across the states and bringing all the struggle groups together in one platform in Tamilnadu and Pondicherry. Interaction with various regional and national media  ended up always with a heated discussion and thus there was an opportunity to intervene the preoccupations and misunderstandings of the journalists across. The need for the mass media to unlearn a lot of things about the Eelam issue was pressing the time.
 

The rally, cultural programs and interaction with the Jawaharlal University students, the following evening was high spirited and enthusiastic. The criminal silence of the national communities towards the Eelam struggle and the Indian imperialistic hands in the Srilankan government's genocide were strongly condemned and the students expresses their conviction to continue to work and break the glass wall.

The lies under the cover of sovereignity were exposed and Student leaders of Revolutional Cultural Front who had arranged for the event expresses their concern that it is shameful to be an Indian under these circumstances. When the multi cultural, multi lingual student groups joined the thundering songs of friends of Voice for Eelam Tamils raised Tamil slogans saluting Muthu Kumar and other souls who lent their lives for Eelam liberation, there was a lot of hope and light on the vision of peace in Eelam not just as Tamil's issue but as a humanitarian conscience.
Co ordinator  Leena Manimekalai, VET

Photos of Delhi Procession

--
leena manimekalai 3,brahathambal street nungambakkam chennai 600034 ph.
9841043438

அறிவு யுத்தம் செய்வோம் - ஈழத் தமிழர் தோழமைக் குரல்

DSC02033 Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்புவண்ண`டி.சர்ட் அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலை கல்லுரி மாணவர்கள், ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான, போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கிய கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவினர் அடிக்க, ஊர்வலம் புறப்பட்டது.

DSC02034

ஜந்தர்மந்தர் வரை இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடைபயணம் நடந்தது. பேருந்துகள், மகிழுந்துகள் , தானிகளில் சென்ற பயணிகள் கைப்பதாகைகளைப் படித்துக் கொண்டே சென்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன. 'போரை நிறுத்து; போரை நிறுத்து ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்து, இந்திய அரசே போரை நிறுத்து,  காந்தி தேசம் கொல்வதா, புத்த தேசம் அழிப்பதா, எங்கள் ரத்தம் ஈழத்தமிழர் ரத்தம், விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடங்கும் போர்' என்பது போல பல முழக்கங்கள் டில்லி குளிர்க்காற்றில் கலந்து தேசிய இனங்களின் காதுகளை அறைந்தது.

DSC02044

முன்னால் பறையிசையும் அதற்கு அடுத்து படைப்பாளிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மீனவ நண்பர்களும் அதனைத்தொடர்ந்து மாணவர்களும் பேரணியில் அணிவகுத்தனர். டெல்லியில் உள்ள  ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களும், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்களும், கலைஞர்களும் இந்த பேரணியில் முக்கிய பங்காற்றினர்.

 DSC02074

பாராளுமன்றத்தை நெருங்க நெருங்க ஊர்வலத்தில் வந்தவர்களின் உள்ளங்களில் உத்வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பாராளுமன்ற   வீதியை நெருங்க காவலர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்க  ஈழ மக்கள் தோழமைக்குரல் நிறுத்தப்பட்ட இடத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். சிறிது முன்னேறி மீண்டும் வேறு ஒரு இடத்தில் காவலர்கள் தடுக்க அங்கேயும் சாலையிலேயே அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.  டில்லி மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள் சூழ ஈழத் தமிழ தோழமைக் குரலின் செய்திகளும், கோரிக்கைகளும் நாடெங்கும் சென்று சேர்ந்தது.

 DSC02217

பிறகு புத்தர் கலைக்குழுவின் குரலிசைக்கலைஞர் மகிழினி அவர்கள் ஈழம் சார்ந்த துயரங்களை ஒப்பாரிப்பாடலாகப் பாடினார்.  பறையிசையும் பாடல்களும் பாராளுமன்ற தெருவை வெம்மையாக்கின. சமர்ப்பா குமரன் அவர்கள் பாடிய பாடல்கள்   எழுச்சிக்கொள்ள வைத்தன. இதற்கிடையில் ஜே.என்.யு.பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தர்ணாவிற்கான ஏற்பாட்டினையும் ஒலி பெருக்கியும் ஏற்பாடு செய்தனர். 33% இட ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தி முடித்த பெண்கள் இயக்கத் தோழர்கள் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசியச் செயலாளர்  தோழர்.ஆனி ராஜா அவர்களின் தலைமையில் ஈழத்தமிழர் மீது நடத்தபடும் போரை நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றனர். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினை மட்டுமல்ல, மானுடத் துயர் என்றும், அந்த துயரைத் துடைக்க தம்மால் ஆனவற்றையெல்லாம் செய்வோம் என ஆதரவு குரல் எழுந்தது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் உரைவீச்சு உணர்வுகளை ஒன்றிணைத்தது. டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் முழக்கங்களை இந்தியில் எழுப்ப, பெருங்கூட்டம் திறண்டது.

 DSC02219

போராட்டத்தின் இறுதிக்கட்டம் உணர்ச்சிமிக்கதாக அமைந்தது.  சமர்ப்பா குமரன் பாடிய 'செவல மாடு கட்டியிருக்கும் சலங்க ஒடியட்டும்; சிங்களவ கொட்டமடிக்கும் இலங்க ஒடியட்டும்' பாடலுக்கு  எல்லாரும் இணைந்து ஆட ஆரம்பிக்க வேகம் கூடிக்கொள்கிறது. பல்வேறு இடங்கள்லிருந்த மக்கள் எல்லாரும் அங்கே வந்து ஒருமித்தனர். இந்த நேரத்தில் டில்லி மாணவர் அமைப்பை சார்ந்த ஆதிகேசவன் அவர்கள் இந்தியில் பேசிய இறுதி உரை அனைவரையும் கவர்ந்தது. இலங்கை அரசின் கொடூரம்; இந்திய அரசின் துரோகம், தமிழக அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை தேர்தல் சந்தையில் விற்கும் நிலைப்பாடு ஆகியவற்றைக்குறித்து சூடான விவாதங்களோடு ஆர்ப்பாட்டம் முடிந்தது

இந்திய இறையான்மைக்கு விழுந்த பலத்த அடி

DSC02218 

ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பின் சார்பில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஈழத்தமிழர் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தக் கோரியும் தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளும் போராட்டம் தொடர்ந்தது.ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள பாராளுமன்ற வீதியில் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலில் போரை நிறுத்த வலியுறுத்தும் முழக்கங்களுடன் எழுத்தாளர்கள்,மாணவர்கள்,மீனவ அமைப்பினர், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். சமர்ப்பா குமரன் புத்தர் கலைக்குழுவோடு இணைந்து எழுச்சிப்பாடல்களைப் பாட பறையிசையும் ஆட்டமும் பந்தலின்முன்பு ஜந்தர் மந்தரில் வெவ்வேறு சமூகப் பிரச்சினைக்ளுக்காக கூடியிருந்த மற்ற மாநிலப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது.

 DSC02220

உறவுகளை இழந்தவர்கள் தலைமுடி நீக்குவது என்பது தமிழர்களின் மரபுவழிப் பண்பாடு. ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் போரை நிறுத்த வலியுறுத்தியும் மொட்டைப் போடும் போராட்டத்தை நடத்தினார்கள் மாணவர்கள்.பறையும் வாழ்த்தொலியும் வேகமாக எழும்ப சாமுவேல்,ரமேஷ்,டில்லிராஜ்,வினோத்குமார்,மற்றும்  எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் ஆகியோர் மொட்டை அடித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இது சுற்றியிருந்த அனைவரையும் வேறொரு தளத்தில் பிரச்சனையின் தீவிரத்தை உணர வைத்தது. அருகே வைகோ உண்ணாவிரதம் இருந்ததால் மதிமுக தொண்டர்கள் வந்து ஈழத்தமிழர் ஆதரவுக் குரல் அமைப்பினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.திடீரென ராஜபக்சேவின் படத்தை அனைவரும் செருப்பால் அடித்தனர்.

 DSC02231

பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட தமிழக மற்றும் பாண்டிச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு வந்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், பா.ம.க. உறுப்பினர்கள் கு.ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, மோகன், கு.ராமதாஸ் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர். அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார். போராட்டத்திலிருந்த மாணவர்கள் இந்தியா போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிலகவேண்டும் என்று முழக்கம் எழுப்பினார்கள்.

 DSC02233

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். ஈழத்தில் மிகவும் கொடுமையான முறையில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 'ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்திய அரசு ஒருவகையில் காரணமாகவே இருக்கின்றது.

 DSCN0807

போரை தடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருந்தாலும் அதுவே போரை நடத்திக்கொண்டிருப்பதுதான் மிகவும் கொடுமை. இந்திய அரசு போரை நிறுத்தவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரக்க குரல் எழுப்புவேன்' என்று உரையாற்றினார். யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் உரையும், கலந்துரையாடலும், ஈழத்தின் அவலத்தை உக்கிரமாக பதிவு செய்து, ஈழ மக்களின் விடுதலைப் போராட்டதை அங்கீகரிக்கும் அவசியத்தை அனைத்து தளங்களிலும் அழுந்த எடுத்துச் செல்லும் உத்வேகத்தை தந்தது.

 DSCN0806

இச்சூழலில் போராட்டவாதிகளில் ஒரு பிரிவினர் எழுத்தாளர்களில் கவிஞர் லீனா மணிமேகலை, கவிஞர் மாலதி மைத்ரி, ஊடகவியலாளர் இன்பா சுப்ரமணியம், எழுத்தாளர் கோணங்கி, கவிஞர். யவனிகா ஸ்ரீராம், அஜயன் பாலா உள்ளிட்ட குழுவினரும் மாணவர்கள் வெங்கடாசலம்,பிரபாகரன், தர்மேந்திரன் ஆகியோர் கொணட குழுவும்  மற்றும் மனித உரிமையாளர்கள் தனம், மஹேஷ், மீனவ இயக்கத் தோழர்கள் லிங்கன், பாரதி என 28 பேர் இலங்கை தூதரகம் முன் சென்று முற்றுகைப் போராட்டமும் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பும் நடத்த புறப்பட்டனர்.  தூதரகம் முன் சென்றதும் தாங்கள் கொண்டுவந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

DSCN0818

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களக் காட்சியினை அடைந்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சூழ்ந்துக் கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

காவல்துறை அவர்களை கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது.கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான் நாங்களல்ல என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைகுப்பின் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.

DSCN0834

இது இலங்கை தூதரகம் முன் நடந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஜந்தர் மந்தரில் நடந்த உண்ணாவிரதமும் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் அனைவரும் உரத்து முழக்கம் எழுப்பினர். ஒவ்வொருவரும் உணர்ச்சிப்பிழம்பாகி இருந்தனர். போராட்டத்தை வாழ்த்த பத்திரிகையாளரும் இங்கிலாந்து நாட்டிற்கான இந்திய தூதுவராக பணியாற்றியவரும் தொடர்ந்து மனித உரிமைக்காக எழுதிவருபவருமான குல்தீப் நய்யார் வந்திருந்து பேசினார். சச்சார் அறிக்கையைத் தந்த
ராஜேந்திர சச்சார் அவர்கள் போராட்டத்திற்கு வந்திருந்து கலந்துக் கொண்டவர்களை வாழ்த்தியும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பேசினார். கைது செய்யப்பட்டவர்களை
விடுதலைச் செய்யப்படும் வரை அவ்விடத்தைவிட்டு வரமாட்டோம் என்றும் வேண்டுமானால் எங்களையும் கைது செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் முழங்கினார்கள்.

 DSCN0837

அதே நாளில் தன் டில்லி உண்ணாவிரதப் பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ அவர்கள், ஈழத் தமிழர் தோழமைக்குரலின் இலங்கை தூதரக முற்றுகை இந்திய இறையான்மைக்கு விழுந்த முதல் அடி என்று குறிப்பிட்டு பேசினார். ஜெனிவாவில் தீக்குளித்த முருகதாசின் தீ தோழர்களின் மனதையும் பற்றி கொந்தளித்ததில் அன்று இரவு சிவந்து இருண்டது.

அறம் நின்று கொல்லும்


மூன்றாவது நாளும் தொடர்ந்த உண்ணாவிரதத்தில், ரிசர்வ் போலீசும் கலந்துக் கொணடது என்று தான் சொல்ல வேண்டும். வலுவான பாதுகாப்பு வளையம். அமைதியான வகையில் நாள் முழுதும் டில்லி தோழர்களும், கலைஞர்களும், மாணவர்களும் வருகை தந்த வண்ணம் இருக்க, போராட்டம் வலுப் பெற்றது. போராட்டங்களில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு தோழர்களும் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகளையும், போராடும் சக்திகளை ஒன்று சேர்க்கும் அவசியத்தையும் பகிர்ந்துக்கொண்டனர். தொடர்ந்து பத்திரிக்கையாள்ர்கள் சந்திப்புகளும் கலந்துரையாடல் போலவே நடைபெற்றது ஊடகங்களின் ஈழம் குறித்த ஊடகங்களின் தவறான புரிதல்களை, முன்முடிவுகளை களைய உதவியது.

DSCN0822

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாலை நடைபெற்ற பேரணியும், கலை நிகழச்சிகளும், கலந்துரையாடலும், பேரெழுச்சியாய் நடைபெற்றது.இந்திய ஏகாதிபத்தியத்தின் நாடி பிடித்து உலுக்கும் வேளை வந்துவிட்டது என்பதே கூடியிருந்த அத்தனை பேரின் உணர்வொருமையாக இருந்தது. ஈழம் குறித்த தேசிய இனங்களின் கொலைகார மெளனத்தை கலைக்கும் பணியை இனி மாணவர்களும், அறிவு சமுதாயமும் மூர்க்கமாக செய்யத் தொடங்கவில்லையென்றால், இனப்படுகொலைக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பாகி விடுவோம் என்ற உண்மையை உடைத்து தொடங்கிய விவாதங்களின் ஆவேசம் அறத்தின் மடையைத் திறந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் முத்துக்குமாருக்கும், உயிர் நீத்த மற்ற நண்பர்களுக்கும் தமிழிலேயே வீரவணக்கம் செய்து முழங்கியது, ஈழ விடுதலையின் குரலை மானுடத்தின் மனசாட்சியாக ஒலித்துக் காட்டியது.

போராட்டத்தின் புகைப்பட ஆல்பம்

-15-02-2009

Monday, February 9, 2009

Indian Government! Stop the war of genocide in Sri Lanka !

The genocidal war against Eelam Tamils in Srilanka is growing intense. 2.5 to 3 lacs are confined within the narrow territorial bounds of Mullai Theevu. Their life in the forests and Corn fields are precarious without adequate shelter, food, and medicines. The Singhalese army continues to bomb hospitals, schools, places of worship and refugee camps, in violation of international human rights norms and war regulations. Weapons like cluster bombs and chemical bombs, forbidden by the international community have been indiscriminately used against the supposed enemies, including innocent civilians.
Though people like Hilary Clinton, the US Foreign Affairs Minister, David Mifant, the British Foreign Affairs Minister, Brad Adams, the Asian Division Director for Human Rights Safety wing and Cordon Weis, the UN News Correspondent have vehemently condemned the Sri Lankan genocide of innocent Tamils, the communal pogrom of the Rajapakshe government continues with audacity.
So far more than 80 thousand innocent Tamils have been killed in the genocide. More than 3 lakh people have been Internally Displaced. More than hundred thousand Tamil women have been brutally raped. And more than eight lakh Tamils have been rendered homeless and have sought asylum in various countries of the world as refugees. UNHRC has recorded “forced disappearance” of more than 5100 Tamil youths from the Srilankan camps. Srilankan human rights groups have reported that the existing camps of Internally Displaced Tamils have virtually become detention camps indulging in “forced disappearances” and hence the call for inviting the Tamils from the war zone to so called “safe zones” by the Srilankan government does not appeal to the suffering Tamils. 99 percent of political prisoners in Sri Lankan jails are Tamils. According to a report by the former Foreign Affairs Minister Mangal Samaraveera, the bombs dropped in Tamil areas by the Singhalese army are more in number than those dropped by USA in Vietnam war.
It is this juncture that the people of Tamilnadu are raising their voices to stop the war and the genocide in Sri Lanka. But the Indian Government is turning a deaf ear to these request. On the one hand, it has not done anything to stop the cruel war. On the other hand, it has also aided the Sri Lankan Government by supplying arms and ammunition and giving military training and thus abetting the annihilation of Tamils in Sri Lanka.
The Tamil people have continued to nurture and strengthen the unity and integrity of the Indian Sub-continent. But, despite several appeals from all sections of people, the inaction and indifference of the Government of India constraints us to believe that it is in fact a war perpetrated and abetted by the Indian forces against the struggling Eelam Tamils.
The Tamils of Eelam , though they have independent national identity, do have umbilical bond by way of ethnic, linguistic and cultural relations with the Indian Tamils. It is but natural that Indian Tamils are anguished owing to genocidal killing of Eelam Tamils in Srilanka. The demonstrations, rallies, general strike and other forms of struggles, including self immolations, in Tamil Nadu in only a natural consequence to voice the protest of the people of Tamil Nadu. The spontaneous protests urges the Indian government to stop abetting the war and prevail upon the Sri Lankan Government to bring an end to the genocidal war. The “voice For Eelam Tamils” is one such expression of moral support to the suffering Sri Lankan Tamils by a federation of students, writers, poets, artists, women groups, fishermen and Human Rights activists.
We appeal to the well meaning Indian intellectuals, students of all castes and creeds of the Indian subcontinent, and supporters of democratic and freedom struggles and friends from the Press to realize that the war in Srilanka is only a state sponsored terrorism unleashed against the innocent Tamils of Sri Lanka now abetted and jointly engineered by the Indian Government, using the Indian tax payers money!Hence, the need of the hour is to call upon the international community to prevail upon the Governments concerned to end the ongoing genocidal war in Sri lanka.
Let us our raise our voice in unison to demand the following:

Oh Indian Government!
1. Stop the Genocidal war against the Tamils of Srilanka.
2. Recognize and uphold the struggle for democracy, dignity, justice and freedom by the Tamils of Srilanka.
3. Invoke the clause of “Right to Protect” of the United Nations Declarations and urge the International Community to initiate action against the Rajapakshe Government for Genocide, war crimes and Crimes against humanity.
4. Initiate action against Srilankan government under national and international law for killing scores of our fishermen by the Srilankan Navy.
5. Facilitate to rush all humanitarian aids to the suffering Tamils through International agencies.
6. Assure a life with dignity for the refugees from Srilanka.

Voice for Eelam Tamils,
Chennai, Pudhucherry, New Delhi.

Organizing Committee:

Leena Manimekalai, Sukirtharani, Selma periyadharshan, Karikalan, Ajayan Bala, Yazhan Aathi, Yavanika Sriram, Konangi, Inba Subramaniyan, Living Smile Vidhya, Asadha, Kalabhairavan (Tamil Poets Movement)

Venketachalam (All College Students Federation, Tamilnadu)

Malathi Maithri (Anangu)

Chandhran (CUPL)

Kalaiyarasan (Tamil Students Federation, New Delhi)

Prema Revathi (Penkal Sandhippu)

K.T. Gandhirajan, Natarajan (Painters Movement)

Bharathi (South Indian fishermen Welfare Association)

Vimala Periyandi (Puducherry fisher women federation)

Buddhar Kalai Kuzhu, Vizhupuram

Protest Programme

12.02.2009 New Delhi
10.00 AM Rally from Jandhar Mandhar to Parliament
11.00 AM Protest in front of Parliament
12.00 AM Relay Fast starts at Jandhar Mandhar

இந்திய அரசே
இலங்கை இனப்படுகொலைப் போரை தடுத்து நிறுத்து!

ஈழ மண்ணில் இன அழிப்புப் போர் உக்கிரமடைந்து வருகிறது. நான்கு இலட்சம் மக்கள் முல்லைத்தீவின் குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். காடுகளிலும் வயல்வெளிகளிலும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். சிங்கள ராணுவம் பன்னாட்டுப் போர் விதிகளை மீறி மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், அகதி முகாம்கள் மீது குண்டுகள் வீசி வருகின்றது. சர்வதேச சமூகத்தால் போரில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ள க்ளஸ்டர் குண்டுகள், இரசாயன குண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபன்ட், மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ், ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் எனப் பலரும் இலங்கையில் நிகழும் இனப் படுகொலையை வன்மையாகக் கண்டித்தும் கூட, இனவெறி இராசபக்சே அரசின் பயங்கரவாதச் செயல்பாடுகள் நின்றபாடில்லை.

இந்த இனப்படுகொலைப் போரில் இதுவரை ஒரு இலட்சம் அப்பாவித் தமிழர்கள் இறந்திருக்கின்றனர். மூன்று இலட்சம் தமிழர்கள் காணாமல் போயிருக்கின்றனர். ஒன்றேகால் இலட்சம் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இலங்கைச் சிறையில் அரசியல் கைதிகளில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள்.

''வியட்நாமில் அமெரிக்கப்படைகள் வீசிய குண்டுகளை விடவும் ஈழத்தமிழர் பகுதிகளில் சிங்களப்படைகள் வீசிய குண்டுகள் அதிகம்'' என வாக்குமூலம் தருகிறார் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

இத்தகைய நிலையில்தான் 'இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து' என தமிழக மக்கள் உரக்க குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்திய அரசு சிறிதும் ஈவு இரக்கமின்றி இக்கோரிக்கையை புறக்கணித்து வருகிறது. போரை நிறுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபடவில்லை எனும் வேதனை ஒருபுறம் என்றால் ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க போர் பயிற்சி, ஆயுத உதவி என மறுபுறம் இலங்கை அரசுடன் பங்காளி உறவு கொண்டாடுகிறது இந்திய அரசு.

இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். பல்வேறு துறைகளில் இதன் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைத்து வருபவர்கள் தமிழர்கள். இத்தமிழர்களோடு மொழி, இன, பண்பாட்டு உறவுகள் கொண்டவர்கள்தாம் ஈழத் தமிழர்கள். சொந்த சகோதரர்கள் சாதல் கண்டு தமிழகத்து மக்கள் இன்று சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதன் விளைவுகள், இன்று தமிழக வீதிகளிலெல்லாம் நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள். அவர்களது நியாயமான கோபங்களை தலைநகர் தில்லியில் பிரதிபலிக்கும் முயற்சிதான் தமிழக மாணவர்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்'.

இந்திய தேசிய அறிவு ஜீவிகளே, இந்திய ஒன்றியத்தின் அனைத்து இனங்களைச் சேர்ந்த மாணவர்களே, விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களே, பத்திரிகைத்துறைத் தோழர்களே,

ஈழத் தமிழர் அனுபவிக்கும் அரச பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளியுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசிடம் மேலதிக வலிமையான குரலில் மீண்டும் கேட்போம்.

இந்திய அரசே!

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைப்போரை உடனே தடுத்து நிறுத்து!

தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை, இந்தியாவில் வாழும் அகதிகளின் மாண்புரிமையை உறுதி செய்!

கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது உடனடியாக நடவடிக்கை எடு!

ஈழத் தமிழர் தோழமைக் குரல்
தமிழ்நாடு, புதுச்சேரி, புது தில்லி

ஒருங்கிணைப்புக் குழு:

லீனா மணிமேகலை, சுகிர்தராணி, செல்மா பிரியதர்ஸன், கரிகாலன், அஜயன் பாலா, யாழன் ஆதி, யவனிகா ஸ்ரீராம், கோணங்கி, இன்பா சுப்பிரமணியன், லிவிங் ஸ்மைல் வித்யா, அசதா, காலபைரவன் (தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்)
வெங்கடாசலம் (அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு)
மாலதி மைத்ரி (அணங்கு)
சந்திரன் (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)
கலையரசன் (தில்லி தமிழ் மாணவர் கூட்டமைப்பு)
பிரேமா ரேவதி (பெண்கள் சந்திப்பு)
கே.டி. காந்திராஜன், நடராஜன் (ஓவியர்கள் இயக்கம்)
பாரதி (தென்னிந்திய மீனவர் நலச் சங்கம்)
விமலா பெரியாண்டி (புதுச்சேரி மீனவப் பெண்கள் கூட்டமைப்பு)
புத்தர் கலைக் குழு, விழுப்புரம்

போராட்ட நிகழ்வு

நாள்: 12.02.2009 இடம்: புதுதில்லி
காலை 10.00 பேரணி ஜந்தர் மந்தரிலிருந்து பாராளுமன்றம் வரை
காலை 11.00 பாராளுமன்றம் முன் முற்றுகைப் போராட்டம்
காலை 12.00 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாநிலைப் போராட்டம்

Monday, February 2, 2009

Dharna Before Parliament

Greetings,

Dharna Before Parliament
We the Student Groups, Writers, Artiste, Human Rights Activists, Women Organisations, Enuchs, Journalists, IT Professionals, Lawyers and Working Class, have gathered in one platform and formed ‘Voice for Eelam Tamils’.
This People Front, met on 01.02.2009 and decided to launch continuous and rigorous struggles against Genocide of Tamils in Srilanka.
In the first phase, a rally and dharna will be organised on 12.02.2009 during the forth coming parliamentary session in New Delhi putting forward the following demands,
Indian Goverment should,
1. stop abetting the genocidal war of the Srilankan Goverment on Eelam Tamils.
2. recognise the liberation struggle of Eelam Tamils.
3. ensure Eelam Tamil’s right to live.
4. take action against Srilankan Government for killing Tamil Fishermen.
‘Voice of Eelam Tamils’ request all the enthusiasts to contact the organisers, confirm their participation and make the Dharna a massive Struggle.

Thanking You,
Co-ordinators
Leena Manimekalai 9841043438.
Venkatachalam, 94443 18945.
email : voice.for.eelamtamils@gmail.com

பாராளுமன்றம் முன் மறியல் போராட்டம்

வணக்கம்,

ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கெதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

01.02.2009-ல் நடந்த முதல் கூட்டத்தில், தில்லி பாராளுமன்றத்தின் வரும் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.2009) பாராளுமன்றத்திற்கு முன் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்திய அரசே,

1. ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்!
4. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு!

என்ற கோரிக்கைகளை முன் வைத்து தில்லி பாராளுமன்றம் முன் நடத்த விருக்கும் மறியலில் பங்கேற்க விரும்பும் அனைவரும் ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

தொடர்புக்கு
அமைப்பாளர்கள்
லீனா மணிமேகலை, 98410 43438.
வெங்கடாசலம், 94443 18945.

மின்னஞ்சல் voice.for.eelamtamils@gmail.com