ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கெதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
01.02.2009-ல் நடந்த முதல் கூட்டத்தில், தில்லி பாராளுமன்றத்தின் வரும் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.2009) பாராளுமன்றத்திற்கு முன் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்திய அரசே,
1. ஈழத் தமிழர் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலைப் போருக்கு துணை செய்யாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்!
4. கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு!
என்ற கோரிக்கைகளை முன் வைத்து தில்லி பாராளுமன்றம் முன் நடத்த விருக்கும் மறியலில் பங்கேற்க விரும்பும் அனைவரும் ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி,
தொடர்புக்கு
அமைப்பாளர்கள்
லீனா மணிமேகலை, 98410 43438.
வெங்கடாசலம், 94443 18945.
மின்னஞ்சல் voice.for.eelamtamils@gmail.com
தங்கள் செய்தியை எங்கள் வலைப்பதிவில் பதிந்துள்ளேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதமிழனால் தமிழன் அழிந்தான் என்பது
ReplyDeleteநமது நேற்றாக இருந்தது...
தமிழனால் தமிழன் அழிந்து கொன்டிருக்கிறான் என்பது
நமது இன்றாக இருக்கிறது...
தமிழனால் தமிழன் மீட்கப்படுவான் என்பது
நமது நாளையாக இருக்கட்டும்...
-காசி ஆனந்தன்.
ஈழத் தமிழர்க்கு தோள் கொடுப்போம் அவர்தம் துயர் துடைப்போம்...
ஒற்றுமை ஓங்குக...
தமிழ் ஈழம் மலர்க...
-சரவணன்.